இந்தியா
Typography

இந்தியாவின் தேசிய விருதினைப் பல முறை பெற்றவரும், இந்தித் திரையுலகில் மூத்த நடிகையுமான சபானா ஆஸ்மி பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியதில், அவர் பலத்த காயமுற்று, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

மராட்டிய மாநிலத்தில், மும்பை-புனே விரைவு சாலையில், நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், இந்தப் பயணத்தில் அவருடன் அவரது கணவரும் பயணம் செய்ததாகவும், அவர் அதிர்ஷ்ட வசமாகக் காயங்களின்றி தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிகிச்சை பெற்று வரும் நடிகை சபான ஆஸ்மி பலத்த காயங்குள்ளான போதும், அவரது உடல்நிலை சீராகவுள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளதாகவும், அவரது வாகனம், முன்னே சென்ற லாரியுடன் மோதியதாலேயே விபத்து நிகழ்ந்ததாகவும், முதற்கட்டத் தகவல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்