இந்தியா
Typography

"திரைப்படங்கள் மூலமாக நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல முடியும். அவ்வாறு கொண்டு செல்ல வேண்டும். தர்பார் திரைப்படம், சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற பணத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கும் மனிதர்களைப் பற்றியது.

பணம் பாதாளம் வரை மட்டுமல் சிறைச்சாலை வரைகூட பாயும் என்று சொல்கிறது" என இன்று வெளியாகியுள்ள தர்பார் படத்தினைப் பற்றி தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கருத்துத் தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.

ராயபுரத்தில் பொதுமக்களுக்கான பொங்கல் பரிசினை வழங்கி தொடங்கி வைத்த அவர், அடுத்து வரும் நான்கு நாட்களுக்கும் காலை 9.00 மணிமுதல், மாலை 7.00 மணிவரை தினசரி ஒரு கடையில் 300 பேருக்கு வழங்கப்படவுள்ளதால் பொது மக்கள் நிதானமாகவும் பொறுமையாகவும் வந்து பெற்றுக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டார்.

அவரிடம், விஜய் நடித்த பிகில் திரைப்படத்திற்கு ஒரு சிறப்புக் காட்சியும், தர்பார் படத்திற்கு நான்கு நாட்கள் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதும் ஏன் என்று செய்தி-யாளர் கேட்ட போது அவர் " எங்களைப் பொருத்தவரை தர்பாரும் ஒன்றுதான் பிகிலும் ஒன்றுதான் " எனக் கூறிய போதே திரைப்படங்கள் குறித்த தனது கருத்தினையும் தெரிவித்ததாக அறியப்படுகிறது.

தர்பார் படத்தில் சசிகலாவின் சிறைவாழ்க்கையை விமர்ச்சிப்பதான வசனங்கள், உள்ளதாகத் தெரியவருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS