இந்தியா
Typography

“நல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும். நாளைய தமிழ்நாட்டின் தலையெழுத்து மாறும்.” என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் எழுதிய ‘ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்' என்ற நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நேற்று நடைபெற்றது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நூலை வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.

அங்கு பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது: “தமிழருவி மணியன் ஒரு வழிப்போக்கனாக இருந்தால், பிரச்சினை இருந்திருக்காது. ஆனால், அவர் காந்தி காட்டிய, காமராஜர் நடந்த ஒரே வழியில் நடப்பதால்தான் இத்தனை சிரமங்களைச் சந்தித்து வருகிறார். தமிழ்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே தமிழருவி மணியனின் நோக்கம்.

யோக்கியவான்கள் அனைவரையும் நம்பியே தற்போது கடைசி முயற்சியை தமிழருவி மணியன் எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஊழலற்ற நேர்மையான ஆட்சி வருவதற்கு சாதி, மதம், மொழி ஆகியவற்றை வைத்து அரசியல் செய்வதைத் தடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் மாற்றம் என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான மாற்றமாக இருக்கும். அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும். நல்லவர்கள் இணைந்தால் நல்லது நடக்கும். நாளைய தமிழ்நாட்டின் தலையெழுத்து மாறும். அதற்கான தொடக்க நிகழ்ச்சியாக இதைக் கருத வேண்டும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்