இந்தியா
Typography

தமிழக சட்டமன்னறத்தின் முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூரில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி  அவர் உயிர் இழந்தார். அவரது மறைவு குறித்து அரசியற் தலைவர்கள் பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா, ஆகியோரின் அன்புக்குப் பாத்திரமானவர் பி.எச்.பாண்டியன். அவரது மறைவு அதிமுகவுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பி.எச். பாண்டியன் மரணமுற்றார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தோம். அதிமுகவின் தொடக்கக் காலத்தில் இருந்து கொள்கை உறுதிமிக்கத் தொண்டராகப் பணியாற்றியவர். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று அவர் ஆற்றிய பணிகள் அதிமுகவுக்குப் பேருதவி புரிந்தன.

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த வழக்கறிஞராகவும், பேச்சாளராகவும், அரசியல் வல்லுநராகவும், சட்டப்பேரவை சபாநாயகராகவும், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராகவும், கழக நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் பணியாற்றிய பி.எச்.பாண்டியன், வரலாற்றின் பாகங்களில் இடம்பெறுவார்.

அவரது மறைவு அதிமுகவுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றால் அது மிகையில்லை. பி.எச்..பாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறோம் என கூறி உள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் கடம்பூர் ராஜூ, பாமக தலைவர் ராமதாஸ், தேமுதிகவின் விஜயகாந்த், மதிமுக தலைவர் வைகோ, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர், இரா.முத்தரசன்,தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்