இந்தியா
Typography

தமிழகத்தின் பிரபலமான இசைக்குழுவான லகஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவின் ஸ்தாபகர்கள் ராம்,லகஷ்மன் சகோதரர்கள். இரட்டையர்களான இச் சகோதரர்களில் ஒருவரான ராமன் நேற்றிரவு காலமானார்.

சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் ராமன் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி கலையுலகத்தில் பலத்த அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. தேனாம்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வீடு திரும்பிய அவர் துர்க்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அசோக் நகர் போலீசார், அவரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், தற்கொலைக்கான காரணம் குறித்த விவரங்களுக்கான விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக உடல் உபாதையில் அவர் அவதியுற்றதாகவும், இதனால்  கடும்  மனஉளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.  விசாரணை நடைமுறைகளின்  பின்னர் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டடு. கலையுலகைச் சேர்ந்த பலரும் அன்னாரது உடலுக்கு இறுதிமரியாதை செலுத்தியுள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்