இந்தியா
Typography

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த தினமான டிசம்பர் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள சூரிய கிரகணம் இந்தியாவில் பெங்களூர், மங்களூர், கோயம்பத்தூர், திண்டுக்கல், தலஸ்ஸெரி மற்றும் மும்பை உட்பட பல நகரங்களில் நெருப்பு வளையமாகத் தோன்றவுள்ளது.

வெறுங் கண்ணால் பார்க்கக் கூடாதான இந்தக் கிரகணத்தை முன்னிட்டு இந்தியாவில் திருப்பதி உட்பட பல ஆலயங்கள் கிட்டத்தட்ட 10 மணித்தியாலங்களுக்கும் அதிகமாக நடை சாத்தப் படவுள்ளன. இந்தியாவின் பல பகுதிகளிலும், சில நாடுகளிலும் பகுதியாகத் தோன்றவுள்ள இக்கிரகணம் வருடாந்தம் ஏற்படக் கூடிய வகையைச் சேர்ந்ததாகும்.

ஒவ்வொரு வருடமும் பூமியில் இருந்து வெகு தூரத்தில் சூரியனின் மத்தியை மறைக்குமாறு நிலவு இவற்றுக்கிடையில் வரும் போதே இந்த பகுதியளவிலான நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகின்றது. இது முழு சூரிய கிரகணத்தை விட பூமியில் தோன்றும் பரப்பளவு குறைவாகும். மேலும் நிலவு சூரியனை மறைக்கும் வீதமும் புவியில் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றது.

கிட்டத்தட்ட 3 மணித்தியாலம் நீடிக்கும் என்று கருதப்படும் இக்கிரகணம் நிகழும் போது சூரியனின் மத்தியை நிலவு மறைக்கும் நேரம் காலை 10.47 மணியாக இருக்கும் என்றும் கணிப்பிடப் பட்டுள்ளது. இந்தியா தவிர்த்து இக்கிரகணம் இலங்கை, சவுதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் வடக்கு மரியானா தீவுகள், குவாம் போன்ற இடங்களிலும் தோன்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜனவரி 10, 2020 ஆமாண்டு அந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்