இந்தியா
Typography

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயமானது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகளை மேலும் வலுவூட்டியிருப்பதாக இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 

இந்திய ராஷ்ட்ரபதி பவனில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கௌரவிக்கும் வகையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தினால் விருந்துபசாரம் வழங்கப்பட்டது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“இது நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு தெற்காசிய வலயத்தின் எதிர்கால பயணத்தை வலுவூட்டும். கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் எதிர்காலத்திற்காக வகுத்துள்ள கொள்கைப் பிரகடனம் அந்நாட்டின் அனைத்து பிரிவுகளையும் துரிதமாக மேம்படும்.” என்றும் இந்திக் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது கருத்துத் தெரிவிக்கையில், “இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்றுத் தொடர்புகளை மேலும் வலுவூட்டுவதன் மூலம் வர்த்தகம் பொருளாதாரம் மற்றும் சமூக தொடர்புகளை மேம்படுத்த முடியும்.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்