இந்தியா
Typography

இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை கவலைக்குரியதாக மாறிவிட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் பொருளாதாரத்தின் நிலைமையை விட சமூகத்தின் நிலை இன்னும் கவலைக்குரியதாக உள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள நாட்டின் மொத்த உள்நாட்டு உறபத்தி புள்ளிவிவரங்கள் 4.5 ஆக உள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார வளர்ச்சி 8 முதல் 9 சதவீதமாக வளர வேண்டும். பொருளாதார கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பொருளாதாரத்தை புதுப்பிக்க உதவாது. பொருளாதார நிலை என்பது அதன் சமூக நிலையின் பிரதிபலிப்பாகும். தற்போதைய சூழ்நிலையை பார்க்கும் போது கவலைக்குரியதாக உள்ளது.” என்றுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்