இந்தியா
Typography

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயை தேசபக்தர் என கூறிய பா.ஜ. லோக்சபா உறுப்பினர் பிரக்யா தாக்கூர், ஒரு பயங்கரவாதி என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை திருத்த மசோதா குறித்து லோக்சபாவில் நேற்று (நவ.,27) விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க.வை சேர்ந்த ராஜா, மகாத்மா காந்தியை கொன்றது ஏன் என நாதுராம் கோட்சே கூறியதை சுட்டிக்காட்டி பேசினார். அப்போது குறுக்கிட்ட பாஜ., எம்பி., பிரக்யா தாக்கூர், 'நாதுராம் கோட்சே, ஒரு தேசபக்தர். அவரை உதாரணமாக கூறக் கூடாது' என பேசினார். பிரக்யாவின் பேச்சு நாடாளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

பிரக்யாவின் பேச்சு குறித்து பேசிய காங்., முன்னாள் தலைவர் ராகுல், தனது டுவிட்டர் பக்கத்தில், பயங்கரவாதி பிரக்யா, பயங்கரவாதி கோட்சேவை ஒரு தேசபக்தர் என்று அழைக்கிறார். அது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு சோகமான நாள், இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இது குறித்து கூறுகையில்; கோட்சே குறித்து பிரக்யா அவ்வாறு பேசியதாக இருந்தால் அதை பாஜ., நிச்சயம் கண்டிக்கும். காந்தி எங்களுக்கு வழிகாட்டும் விளக்காக இருந்தார், இனியும் இருப்பார், எனக்கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்