இந்தியா
Typography

தமிழீழ தேசத்துக்காகப் போராடி மரணித்த போராளிகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்று வருகையில், இந்தியத் தொலைக்காட்சி ஊடகமொன்று வெளியிட்டுள்ள செவ்வியில், தாயக விடுதலைக்காக தன் குடும்பத்தையே பலிகொடுத்தார் பிரபாகரன் என, முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இன்னமும் தாயத்திலே தான் வாழ்வதால் தன்னை உருமறைப்பும், குரல் மாற்றமும் செய்து இப் பேட்டியை வெளியிடக் கோரிய அவரிடம், செவ்வி காண்பவர் பிரபாகரன் உயிரோடிருப்பது குறித்துக் கேட்ட போது, அதற்கு வாய்ப்பில்லை எனப் பதில் தருகின்றார். அவர் மட்டுமல்ல அவரோடிருந்த அனைவரும் இறுதிக் கணங்களில் கொல்லப்பட்டார்கள் என்கிறார். மேலும் பிரபாகரன் இறுதிக் கணத்தில் தன்னைத்தானே சுட்டுக் கொன்றிருக்கலாம் எனவும், இறந்ததாகக் காட்டப்பட்ட படத்தில் அவரது கீழ்தாடையில் அதற்கான அடையாளம் இருந்ததாகவும் சொல்கிறார். அது விடுதலைப் புலிகளின் நடைமுறைகளில் ஒன்றுதான் எனவும் குறிப்பிடுகின்றார்.

மேலும் பிரபாகரனது குடும்பத்தவர் அனைவரும் இப்போரில் உயிர் ஈகை செய்துள்ளார்கள் எனக் கூறும் அவர், பொட்டு அம்மானும் உயிரோடிருப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறார். அவர் உயிரோடிருந்தால் கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச புலனாய்வுத் துறை அவரைக் கண்டு பிடித்திருக்கும் எனவும் சொல்கிறார்.

நேற்றைய தினம் பிரபாகரனின் 65வது பிறந்ததினம், தமிழகத்தில் ஆங்காங் கொண்டாடப்பட்டிருந்தது. ஆயினும் அன்மையில் விடுதலைப்புலிகள் மீதான தடையினை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய அரசு நீடித்ததை உறுதிசெய்திருப்பதும், பாராளுமன்ற உரையின் போது, திமுக உறுப்பினர் ஒருவர் சோனியாகாந்திக்கு விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் இருக்கிறது எனக் கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்