இந்தியா
Typography

மராட்டியத்தில் கடந்த ஒருமாத காலமாக நீடித்து வந்த அரசியல் பரபரப்பும், குழப்பங்களும் ஒருவாறு முடிவுக்கு வருகின்றன. தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரி பதவியைத் துறந்ததும், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து அரசமைக்கின்றன.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை முதல் மந்திரியாக பதவியேற்க இருக்கிறார்.

இன்று காலை நடைபெற்ற சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் முன்னிலையில், புதிய எம்.எல்.ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கபட்டது. நாளை மாலைசிவாஜி பார்க்கில் நடைபெறும் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் மராட்டிய முதல் மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்கிறார்.

இதற்கு முன்னோட்டமாக இன்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை உத்தவ் தாக்கரேயை தனது மனைவி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்