இந்தியா
Typography

சிலைக்கடத்தல் விவகாரங்களின் சிறப்பு அதிகாரியான பொன். மாணிக்கவேல் மீது தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனது பணிகள் குறித்த அறிக்கையினை அவர் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்த அறிக்கையில், தன்னால் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விளக்கமளித்துள்ள அவர்; சிலைக்கடத்தல் விசாரணைகளின் போது அதிகாரிகளின் தலையீடு இருந்ததையும், கடமை தவறிய காவல்துறை சார்ந்தவர்கள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு அதிகாரியாக தான் நியமிக்கப்பட்ட காலப்பகுதியில், 56 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் இருந்து இதுவரை பதினைந்து வரையிலான பாராம்பரியச் சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பிலான விசாரணைக்காக தாம் உபயோகித்த வாகன செலவை வழங்குவதற்குக் கூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இவ்வாறான நடைமுறைகள் பாரம்பரிய சிலைகளை மீட்பதில் அரசு காட்டும் மெத்தனப் போக்கினையே உணர்த்துவதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்