இந்தியா
Typography

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தில் இராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று சனிக்கிழமை தீர்ப்பு வழங்குகிறது.

இந்த விவகாரத்தில் 5 நீதிபதிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதால், ஒருமித்த தீர்ப்பு வழங்கப்படுவதாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்தார். தீர்ப்பை வாசிக்க அரைமணி நேரம் ஆகும் என்று கூறிய அவர் வாசித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.

* குறிப்பிட்ட இடம் குறித்த தொல்லியல் துறையின் தரவுகளை, ஆதாரங்களை ஒதுக்கி விட முடியாது.

* ஒரு மதத்தின் நம்பிக்கை மற்றொரு மதத்தின் நம்பிக்கையை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது

*அயோத்தியில் ராமர் பிறந்ததாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

* மதங்களுக்குள் உள்ள நம்பிக்கையை நீதிமன்றம் மதிக்கிறது.

* அங்கு, இஸ்லாமிய கட்டுமானம் இல்லை என ஆதாரங்கள் கூறுகின்றன.

* மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும்.

* அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இரு மதத்தினரும் வழிபாடு நடத்தி உள்ளனர்.

* ஒரு பிரிவினரின் நம்பிக்கையை, மற்றொரு பிரிவினர் தொந்தரவு செய்யக்கூடாது.

* *அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அலகாபாத் உயர் நீதிமன்றம் மூன்றாகப் பிரித்துக் கொடுத்தது தவறு.

* 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட செயல் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய செயல்

* அயோத்தி நிலத்துக்கு உரிமை கோரிய நிர்மோகி அஹோரா மனுவில் ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை

* மதநம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை

* நிலத்தின் உரிமையை நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது.

* 1857ம் ஆண்டுக்கு முன்புவரை, இந்துக்கள் சர்ச்சைக்குரிய கட்டடத்தின் உள்பகுதியில் வழிபடத் தடையில்லை.

* 1857-ல் கட்டத்தின் உள்பகுதிக்கும், வெளிப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் உருவாக்கப்பட்டன.

* மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாம் முறைப்படி இல்லை என்பதற்கு ஆதாரம் உள்ளது.

* பாபர் மசூதி இருந்த இடம் ழுழுக்க முழுக்க தங்களது என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை.

* அயோத்தியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்க வேண்டும்.

*வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசு, உத்தரபிரதேச அரசுகளுக்கு உத்தரவு

* சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தில் இராமர் கோயில் கட்டலாம். இதற்காக புதிய அறக்கட்டளை ஒன்றை 3 மாதத்தில் மத்திய அமைக்க வேண்டும். அந்த அறக்கட்டளை இராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

-விகடன்

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்