இந்தியா
Typography

இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கள், அரசியற் தளத்திலும், சமூகவலைத் தளங்களிலும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அவரது கருத்துத் தொடர்பில் அரசியற் தலைவர்கள் பலரும் கருத்துக் கூறிவருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ரஜினிகாந்தின் கருத்துக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.தனது கருத்தை துணிச்சலாக எடுத்துரைத்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த திருமாவளவன், நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கொள்கை இந்துத்துவா அரசியல் அல்ல என்பதை துணிச்சலாக வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறும் ஆன்மீக அரசியல், இந்துத்துவா அரசியல் அல்ல என்பதை அவர் ஏற்கனவே ரதெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்