இந்தியா
Typography

ராஜீவ்‌ காந்தி கொலை வழக்குத் தொடர்பில், சிறையில் உள்ள ஏழு பேரை விடுவிப்பது குறித்து தமிழக அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் ‌பன்வாரிலால் புரோகித் எதிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆளுனர் தனது எதிர்பினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும் ஆளுநர், தமிழக அரசுக்குஅதனை உத்தியோகபூர்வ அறிவித்தலாகத் தெரிவிக்கவில்லை எனவும் அறியப்படுகிறது.

ஏழு பேரை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கைகள் முன்பு வைக்கப்பட்ட போது, இவர்களை விடுவிப்பது அபாயகரமான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என மத்திய உள்துறை அமைச்சகம், தெரிவித்திருந்தது. இதனையே தற்போது தமிழக ஆளுநரும் தெரிவித்து நிராகரிக்கலாம் எனவும் ஊகம் தெரிவிக்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS