இந்தியா
Typography

சட்டவிரோதக் குடியேறிகள் என அறியப்பட்ட இந்தியர்கள் 311 பேர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுகிறார்கள். இவர்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் சென்றவர்கள் என அறியப்படுகிறது.

மெக்ஸிகோ ஊடாக, சர்வதேச தரகர்கள் மூலம், தலா 30 லட்சம் வரையில் செலுத்தி அமெரிக்காவிற்குள் வந்தவர்களென அறியப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பேரில், மெக்ஸிக்கோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் கடுமையான விசாரணைகளின் போதே, இந்த 311 பேரும் கண்டறியப்பட்டதாகவும், இவர்களில் ஒருவர் பெண் எனவும், தெரிய வருகின்றது.

சட்டவிரோதக் குடியேறிகள் என அறியப்பட்ட இவர்கள் அனைவரும், பாதுகாப்பு அதிகாரிகளின் துணையுடன், தனி விமானம் மூலம் புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை இவர்கள் புதுடெல்லியை வந்தடைவார்கள் எனவும் இவர்களில் பெரும்பாலோனோர் பஞ்சாபிகள் எனவும் அறியவருகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்