இந்தியா
Typography

மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், சிவசேனாக் கட்சியின் வேட்பாளாராக ஆதித்யதாக்ரே மனுதாக்கல் செய்துள்ளார். மும்பை வொர்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் தனது மனுதாக்கலைச் செய்துள்ளார்.

இத்தொகுதி ஏற்கனவே சிவசேனா கட்சியின் கோட்டையாக கருதப்படுகிறது. தற்போது அக்கட்சியின் சார்பில் வேட்பாளராக மனுதாக்கல் செய்திருக்கும், ஆதித்யதாக்ரே, சிவசேனாக் கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேயின் பேரனும் அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகனுமாவார். 2010ஆம் ஆண்டு தீவிர அரசியல் குதித்த ஆதித்ய தாக்கரே, சிவசேனா கட்சியின் யுவ சேனா இளைஞர் அணியின் தலைவராகச் செயலாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்