இந்தியா
Typography

எதிர்வரும் 11, 12 ஆகிய திகதிகளில் இந்தியப்பிரதமருக்கும், சீனப் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பும், பேச்சுவார்த்தையும், சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது இருநாட்டு உறவுகள், பொருளாதாரம், வணிகம் கலாச்சாரம், உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும், பரஸ்பர பரிவர்த்தனைகள் குறித்தும் அவர்கள் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வரும் பிரதமர் மற்றும் சீன அதிபரை வரவேற்க தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாட்டின் பெருமைகளை எடுத்துக் கூறும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. கல்லூரி மாணவியர், சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் அதிமுக கட்சியினர் உள்ளடங்கிய வரவேற்பாளர்கள், மூவர்ணக்கொடி மற்றும் சீன கொடிகளை அசைத்து பிரமாண்ட வரவேற்பளிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தமிழர் பாரம்பரிய கலைவடிவங்கள் பலவும் வரவேற்புப் பாதையில் நிகழ்த்தப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. சீன அதிபரின் பாதுகாப்பான பயணத்திற்காக, எந்த ரக துப்பாக்கி குண்டுகளும் துளைக்க முடியாத கண்ணாடிகள் பொருத்தப்பட்ட சிறப்பு வண்டி, சீனாவிலிருந்து விமானம் மூலம் தருவிக்கப்பட்டிருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்