இந்தியா
Typography

இந்தியாவிற்கு குறுகிய காலப் பயணமொன்றினை மேற்கொண்டிருக்கும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு டெல்லியில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் இருநாட்டு தொடர்புகளை மேம்படுத்துவது என்பது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை இச்சந்திப்பின் போது பிரதமர்கள் இருவரும் பேசிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர்களுக்கிடையிலான சந்திப்பின் பின்னதாக வெளியிடப்பட்ட விரிவான அறிக்கையில், பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளுக்கும் இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்விநியோகம், இளைஞர் நலன், கல்விசார் உதவிகள், கடலோரப் பாதுகாப்பு என்பன வற்றை உள்ளடக்கியாதாக இந்த ஒப்பந்தங்கள் உள்ளதாகத் தெரிய வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்