இந்தியா
Typography

இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட பிரபலங்களின் மீது தொடரப்பட்டிருக்கும் தேசத்துரோக வழக்குக்கு எதிராக பலமான கண்டனங்கள் எழுந்துள்ளன. பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவரினால் , பீகார் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்குக் குறித்தே பலரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துச் சுதந்திரம் மிக்க ஜனநாயக நாட்டில் நாம் உள்ளோமோ? அல்லது சர்வாதிகார நாட்டில் உள்ளோமோ ? கேள்வி எழுப்பியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், குறிப்பிட்ட இந்தத் தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற வேண்டும் எனப் பிரதமரிடம் கோரிக்கையும் வைத்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கருத்துத் தெரிவிக்கையில், பிரபலங்கள் பலர் மீதான தேசத்துரோக வழக்குப்பதிவு கேலிக் கூத்தானது என விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் இந்த வழக்கு கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என குற்றஞ்சாட்டியுள்ளார். தேசத்தை நேசிப்பவர்கள் பிரதமரையும் மதிப்பால்தான் அவருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள். அதனை எவ்வாறு தேசத்துரோகமாக கருத முடியும் ? என பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்