இந்தியா
Typography

நமது ஹெலிகாப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு என, இந்திய விமானப்படைத் தளபதி ராகேஷ் குமார் சிங் பதாரியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்; சென்ற பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற்ற பதான்கோட் தாக்குதலுக்குப் பின்னர், நமது விமானப்படை வீரர்கள் தீவிரக் கண்காணிப்பில் இருந்தார்கள். அப்போது வானில் நமது எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் சென்றதை, எதிரிநாட்டு ஹெலிகாப்டர் என தவறுதலாக நினைத்து ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியதில், ஹெலிகாப்டரில் இருந்த 6 விமானப்படை வீரர்களும் பலியானார்கள். நமது ஹெலிகாப்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய தவறு.

இந்த தவறைச் செய்த 5 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற விசாரணை நடந்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது விரைவில் விமானப்படை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், இதுபோன்ற தவறுகள் வரும்காலத்தில் நடைபெறாதிருப்பதில் கவனம் கொள்ளப்படும் எனவும், எந்தவிதமான அசம்பாவித சூழலையும் சந்திக்க விமானப்படை தயாராக இருக்கிறதெனவும் குறிப்பிடடார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்