இந்தியா
Typography

அரசின் செயற்பாடுகளை விமர்சிக்கும் நபர்களை, தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவது ஏற்புடையது அல்ல எனக் குறிபிட்டு, ஐம்பது முக்கிய பிரபலங்கள், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர்.

இந்த கடிதம் நாட்டின் பிரதமரின் கௌரவத்தை அவதூறு செய்வதாகவும், தேசத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்துவதாகவும், பீகாரின் முசாபர்நகர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது. வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவரால் தொடரப்பட்டிருந்த இந்த வழக்கில், பிரபலங்கள் எழுதிய இந்த கடிதம் பிரிவினைவாதிகளை ஆதரிக்கின்றது எனவும் குற்றம் சாட்டப்படுள்ளது.

இவ் வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் திவாரி , குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மீதும் வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, முசாபர் நகர் போலீசார் திரைப்பட இயக்குநர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், ஷியாம் பெனகல், ராமச்சந்திரா குகா, அபர்ணா சென், நடிகை ரேவதி உள்ளிட்ட ஐம்பது பிரபலங்கள் மீது, தேச துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக அறியவருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்