இந்தியா
Typography

இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தால் நிலவின் தென் துருவப் பகுதியினை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட சந்திராயன் 2 விண்கலத்திலிருந்து நிலவின் தரையில் இறங்க வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில், இஸ்ரோவின் தரைக் கட்டுப்பாட்டு நிலையத் தொடர்பை இழந்தது.

தொடர்பிழந்த விக்ரம் லேண்டர் நஜிலவின் தரையில் விழுந்திருப்பதை ஆர்பிட்டர் அனுப்பிய படங்கள் மூலம் அறிந்து கொண்ட .ஸ்ரோ விஞ்ஞானிகள், விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இஸ்ரோவின் இந்த முயற்சியினைப் பாராட்டிய, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமும் விக்ரம் லேண்டரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தது.

நாசா‌ ஆய்வு மையத்தால், 2009 ஆம் ஆண்டு நிலவின் சுற்று வட்டப் பாதைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆர்பிட்டர் மூலம், விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுக்கவும், சமிக்ஞை ஏற்படுத்தவும் முயற்சிகள் செய்த நாசா விஞ்ஞானிகள், தமது முயற்சி பலனளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்