இந்தியா
Typography

இந்தியப் பொருளாதார நெருக்கடி என்பது மிக முக்கி விடயமாகப் பேசப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாதவகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இவை தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பின் போது, உற்பத்திச் சரிவினைச் சந்தித்து வந்த மோட்டார் வாகன தொழில்துறையை சரிசெய்யும் வகையில் சலுகைகளை அவர் அறிவித்தார். பொதுமக்கள் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், வங்கிகளின் கடன் வசதிகளை அதிகப்படுத்தவும், பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மூலதனம் வழங்கப்படும் என்றார்.

இவையனைத்திலும் மேலாக பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் அரசு நடவடிக்கையாக, 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட உள்ளதாக அறிவித்தார்.

இது இவ்வாறிருக்க டெல்லியில் மீண்டும் இன்று செய்தியாளர்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பில் மேலும் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்