இந்தியா
Typography

சென்னையில் வீதியோர பேனர் விழுந்ததில் இளம்பெண் மரணமானதைத் தொடர்ந்து எழுந்த பொது மக்கள் விசனத்தை தவிர்க்கும் பொருட்டு அரசியற் தலைவர்கள் பலரும் , தங்கள் கட்சி சார்பாக கட் அவுட்கள் வைப்பதை தவிர்க்க வேண்டுமென அறிவித்துள்ளார்கள்.

தமிழக முதல்வர், துணைமுதல்வர், கையொப்பமிட்டு, அதிமுக உறுப்பினர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காரணத்திற்காகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கட் அவுட்டுகள் வைப்பதைத் தவிர்க்க வேண்டுமென கழக உடன்பிறப்பினர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலினும், திமுக கட்சி சார்ந்து கட் அவுட்கள் வைப்பதை நிறுத்த வேண்டுமெனக் கோரியுள்ளார். அதுபோலவே பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது கட்சி உறுப்பினர்கள் கட் ஆவட் வைப்பதைத் தவிர்க்க வலியுறுத்தியுள்ளார்.

இது விடயத்தில் காவல்துறையும், மாவட்ட அலுவலகர்களும் மெத்தனமாக இருப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இவ்விகாரம் தொடர்பில் நீதிமன்றில் பொது நலவழக்குத் தொடர்ந்து போராடி வரும் டிராபிக் ராமசாமிக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவிக்கபட்டும் வருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS