இந்தியா
Typography

இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள திமுக எம்பி கனிமொழி, தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக, இலங்கை அமைச்சர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருடன் இப் பேச்சுவார்த்தைகளில், ராமநாபுரம் எம்.பி. நவாஸ் கனியும் கலந்து கொண்டதாகத் தெரிய வருகிறது.

மீனவர்கள் பிரச்சனையில் மீனவர்கள் தாக்கப்படாமல் இருப்பதற்கான வழிமுறைகளை ஆராயும் பொருட்டான இருதரப்பு மாநாடு ஒன்றினை, இந்த ஆண்டு இறுதிக்குள் நடாத்தவும், உடன்பாடு காணவும் வேண்டி, இலங்கையின் கடல்வளத்துறை அமைச்சர் உட்பட முக்கியமானவர்களுடன் நேரில் சந்தித்து உரையாடியுள்ளதாகவும் அறியவருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்