இந்தியா
Typography

அதிமுக பிரமுகர் இல்லத் திருணமத்திற்காக வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில், வீதியில் பயணம் செய்த மாணவி ஒருவர் பலியான சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்ற இச்சமபவத்தில் பலியான சுபஸ்ரீ என்னும் மாணவியின் மரணம் தொடர்பான வழக்கினை, சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன்னெடுத்து விசாரித்து வருகிறது. ஏற்கனவே சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, விதிகளை மீறி வைக்கப்படும் பேனர்கள் தொடர்பில் தொடர்ந்திருந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிமன்றத்தினால் மாநில அரசுக்கு எதிராகப் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை அதிகாரிகள் நடைமுறைப்படுத்துவதில் அக்கறை கொள்வதில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு பின்பற்றுமெனும் நம்பிக்கை குறைந்து வருவதாகவும் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி, காவல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்