இந்தியா
Typography

கோவை ஈஷா மையத்தின் ஸ்தாபகர், சற்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஆரம்பித்துள்ள புதிய இயக்கம் காவேரி கூக்குரல். இதன் நோக்கம் காவேரி நதியினைக் காப்பதும், அதன் பயள் பெறும் விவசாய நிலங்களை பாதுகாப்பதுமாகும்.

இதற்காக தலை காவேரியில் இருந்து திருவாரூர் வரை அவர் இருசக்கர வாகனப் பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின் வழி சென்ற 11ந் திகதி தமிழகக் கிராமங்களின் வழியே பயணிக்கிறார். பயணத்தின் போது ஆங்காங்கே விவசாயிகள், மற்றும் அமைப்புக்களின் உறுப்பினர்களைச் சந்தித்து உரையாற்றியும் வருகிறார்.

இந்த உரைகளின் போது, பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகத்தில் சிறந்திருந்த விவசாயம், கடந்த இரு தலைமுறைகளாக வீழ்ச்சியுற்றதாகவும், இதனால் தமிழகத்தின் விவசாய நிலங்கள் பலவும் வளங்குன்றிப் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலை மாறி தமிழ் மண் செழிப்பாக வாழவேண்டுமாயின் அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டுமென அழைப்பும் விடுத்துள்ளார் என அறியவருகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்