இந்தியா
Typography

தமிழக முன்னாள் முதலைமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த ஒரு அரசியற் தலைவர். அவரது வாழ்க்கையை மையப்படுத்தி, இயக்குனர் ஏ.எல். விஜய் 'தலைவி' எனும் பெயரில் திரைப்படமொன்றினை, ஜெயலலிதா குடும்பத்தின் அனுமதியுடன் எடுத்து வருகின்றார்.

இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் " குயீன்" எனும் தலைப்பில் ஒரு பெண் அரசியல்வாதியின் கதையினை வெப் சீரியலாகத் தயாரித்து வருவதாகவும், இதற்கான முழுபக்க விளம்பரங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.

இந்த வெப் சீரியலில் சொல்லப்படும் கதையின் நாயகி ஜெயலலிதா என ஊகங்கள் வெளிவந்துள்ள நிலையில், அது தொடர்பில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் " எங்களது குடும்பத்தின் அனுமதி இன்றி ஜெயலலிதா குறித்து படம் எடுக்க முற்பட்டால் அவர்கள் மீது சட்ட ரீதியலான தீவிர நடவடிக்கை எடுப்போம். ஆதலால் இயக்குநர் கௌதம் மேனன் ‘குயின்’ என்ற வெப் சீரிஸ் எந்த அரசியல்வாதியின் சுயசரிதை என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்” எனப் பத்திரிகைகள் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்