இந்தியா
Typography

தமிழகத்திலிருந்து 37 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற் போன, 30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

37 ஆண்டுகளின் முன்னதாக, தமிழகத்தின் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலிருந்த 700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை காணமற்போனது. இது தொடர்பில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான, தனிப்படை போலீசார் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடத்தியதில் காணமற்போன சிலை, ஆஸ்திரேலிய அருங்காட்சியகமொன்றில் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் எடுத்த தொடர் நடவடிக்கைகள் காரணமாக, ஆஸ்திரேலியாவிலிருந்து ஐம்பொன்னிலான அந்த நடராஜர் சிலை, டெல்லி ஆஸ்திரேலிய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, தற்போது சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், அச் சிலை தற்போது சென்னைக்கு எடுத்துவரப்படுகிறது எனத்தெரிவிக்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்