இந்தியா
Typography

அரசு முறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாலை சென்னை திரும்பினார். நாடு திரும்பிய முதலமைச்சரை, அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் திரண்டு நின்று வரவேற்றனர்.

இங்கிலாந்து, அமெரிக்கா , துபாய் ஆகிய நாடுகளுக்கான இந்த அரச சுற்றுப்பயணத்தை முதல்வர் சென்ற 28ந்தேதி ஆரம்பித்திருந்தார். அவரது பயணத்தின் போது தமிழகம் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பாக, வெளிநாட்டு அரசழியலாளார்கள், பிரமுகர்களுடன் உரையாடியிருந்தார்.
முதல்வர் தனது பயணங்களின் போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இப் பயணத்தின் இறுதி கட்டத்தில், துபாய் சென்ற அவர், ஐக்கிய அரபு அமீரக அரசின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை மற்றும் இந்திய துணைத் தூதரகம் இணைந்து நடத்திய துபாய் தொழில் முனைவோர் ஆலோசனைக் கூட்டத்திலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்