இந்தியா
Typography

கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தின் மீதான எதிர்த்தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் விமானம் சுடப்பட்டதையடுத்து பாராசூட் மூலம் தப்பித்தார்.

ஆயினும் அவரது பாரசூட் தரையிறக்கம் துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் எல்லைக்குள் நிகழ்ந்தது. இதனால் பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் சிக்கிக் கொண்ட அவர் பல்வேறு விசாரணைகளுக்கு உள்ளானார். இருதரப்பு அரசுகளும் கண்டுகொண்ட உடன்பாட்டினடிப்படையில், அபிநந்தனை பாகிஸ்தான் விடுவித்தது.

பாகிஸ்தான் வசம் சிக்கியிருந்தபோது, அபிநந்தன் நடந்து கொண்ட நிதானமும், பொறுப்பும், தீரமும் அனைவரையும் கவர்ந்தது. அவரது இச் செயல்களைக் கௌரவிக்கும் வகையில், அபிநந்தனுக்கு நாட்டின் உயரிய விருதான வீர் சக்ரா விருது வழங்கப்பட வுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்