இந்தியா
Typography

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் காஞ்சிபுரத்திற்குச் சென்று, நள்ளிரவில் அத்தி வரதரைத் தரிசனம் செய்திருக்கின்றார்கள்.

அத்திவரதர் தரிசனம் என்பதுதான் ஆன்மீக தளத்தின் தற்போதைய ட்ரென்ட். அதற்குள் ஆன்மீக அரசியல் பேசும் சூப்பர் ஸ்டார் வரவில்லையென்றால் எப்படி?

கடந்த ஜூலை 1ம் தேதி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அனந்தசரஸ் குளத்திலிருந்து வெளிவந்த அத்திவரதரை தரிசிக்க தமிழகத்தில் மட்டுமின்றி பல்வேறிடத்து மக்களும் தரிசனம் செய்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும்  விஐபி நுழைவாயில் வழியாக , மாவட்ட ஆட்சியர் சரவணன் அவர்களால் அழைத்து வரப்பட்டனர்.

நள்ளிரவு 12 மணியளவில் வருகைதந்த அவர்கள் சிறப்புத் தரிசனமும், அர்ச்சனையும் செய்து கொண்டார்கள். 40 ஆண்டுகளின் பின்னதாக, கடந்த ஜூலை 1ம் தேதி வெளி வந்த அத்தி வரதர், வரும் 17ம் தேதி மாலை, மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் வைக்கப்பட உள்ள நிலையில், அவரது தரிசன காலம் நீடிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகளும் வைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்