இந்தியா
Typography

நீலகிரி, உதகமண்டலம், மேட்டுப்பாளையம் பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலசரிவில் பலர் பலியாகியுள்ளதாகவும், பல இடங்களில், மீட்பு பணிகளுக்கு செல்ல முடியாதவாறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அறியவருகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். அவரது குற்றச்சாட்டினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழு வேகத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், வீடுகளை இழந்தவர்கள் தற்காலிகமாக தங்குவதற்கு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், வீடிழந்தவர்களுக்கு சேதமடைந்த வீடுகள் சரிச்செய்து தருவதற்கான ஏற்பாடுகளும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரண தொகையும் வழங்கப்படுவதாகுவும் தெரிவித்த அவர், இவை குறித்த விபரங்கள் அறியாமல் ஸ்டாலின் பேசுகிறார் எனக் கூறியுள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்