இந்தியா
Typography

கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. கடந்த நான்கு நாட்களில் மட்டும், நாற்பது அடிகள் வரை உயர்ந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் நூறு அடிகளாக மாறியிருக்கிறது. மேட்டூர் அணையின் கொள்ளளவு நூற்றியிருபது அடிகளாகும். போதுமான அளவு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதுடன் திறந்தும் வைக்கிறார்.

மேட்டுர் அணை திறக்கப்படுவதால் தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர் டெல்டா பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்