இந்தியா
Typography

பாஜக கட்சியின் முன்னாள் டெல்லி முதல்வரும் கடந்த பாஜக ஆட்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகக் கடமையாற்றியவருமான சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி இயற்கை எய்தியுள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த பெண் எம்பிக்களில் பிரதானமான இவர் 7 முறை மக்களைவை எம்பியாகவும் கடமையாற்றி வந்தவர் ஆவார். 1953 ஆமாண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி ஹரியானாவில் பிறந்த சுஷ்மா சுவராஜ் இறக்கும் போது அவருக்கு வயது 66 ஆகும். அண்மையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சுஷ்மா பின்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சுஷ்மா சுவராஜ் கோடிக் கணக்கான மக்களுக்கு உத்வேகமாகத் திகழ்ந்த மிகச் சிறந்த தலைவர் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இவர் ஏற்கனவே நோய் வாய்ப்பட்டு இருந்த காரணத்தால் இம்முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு இந்தியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்