இந்தியா
Typography

கர்நாடகாவில் அண்மையில் பதவி விலகி ராஜினாமா கடிதம் அளித்த எம் எல் ஏக்கள் சமரசம் செய்து கொள்ளா விட்டால் அவர்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை மூலம் பதவியைப் பறிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் இதன் மூலம் இனி வரும் 6 ஆண்டுகளுக்கு அவர்களால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உண்டாகும் என்றும் செய்தி வெளியாகி உள்ளது.

அண்மையில் கர்நாடகாவின் காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளக் கட்சிகளைச் சேர்ந்த 13 எம் எல் ஏக்கல் தங்கள் பதவியைத் திடீரென ராஜினாமா செய்து கடிதம் வழங்கி விட்டு பாஜக பாதுகாப்புடன் மும்பை நட்சத்திர ஹோட்டலில் இருப்பதாகத் தகவல் கூறுகின்றது. இந்தத் திடீர் நடவடிக்கையால் கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளக் கட்சிகளின் ஆட்சி கவிழும் வாய்ப்பு உண்டாகியுள்ளது.

இதைத் தடுக்க குறித்த கட்சித் தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் இந்த 13 பேரின் ராஜினாமா கடிதத்தையும் பரீட்சித்து 8 பேரின் கடிதங்களை நிராகரித்தும் எஞ்சிய ஐவரின் கடிதங்கள் குறித்து நேரில் விளக்கம் அளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் தற்போது கர்நாடக அரசியலில் பரபரப்பு சூழ்நிலை காணப் படுகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்