இந்தியா
Typography

இந்தியா முழுதும் மே 5 ஆம் திகதி மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடந்த நிலையில் ஒடிசாவில் மட்டும் ஃபானி புயல் காரணமாக இத்தேர்வு நடத்தப் படவில்லை.

இந்நிலையில் மே 20 ஆம் திகதி ஒடிசாவில் நீட் தேர்வு நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அறிக்கப் பட்டிருந்த தேர்வு மையங்களில் தான் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

ஒடிசாவில் கரையைக் கடந்த ஃபானி புயல் காரணமாக அங்கு பெருமளவும் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. சீர்திருத்தப் பணிகளுக்காக அம்மாநில முதல்வர் நவீன் பட்னாயக் தனது ஒரு வருட சம்பளத்தை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இப்புயலின் காரணமாக 5000 பள்ளிகளும் ஆயிரக் கணக்கான அரச அலுவலகங்களும் சேதமடைந்துள்ளதாகவும் குடி நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப் பட்டு பொது மக்கள் பெரும் அவஸ்தையைச் சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இப்புயலின் விளைவால் 35 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.

நிவாரண நிதியாக மத்திய அரசிடம் 17 000 கோடி ரூபாய்கள் கேட்கப் பட்ட நிலையில் முதற்கட்டமாக 1000 கோடி வழங்கப் பட்டுள்ளது. இதேவேளை நாளை புதன்கிழமை காலை 9:30 மணிக்கு 11 ஆம் வகுப்புக்கான பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவுகள் ஏற்கனவே பதிவு செய்யப் பட்ட கைத் தொலை பேசிகளுக்கு எஸ் எம் எஸ் மூலமாகவும் இணையத் தளத்திலும் வெளியிடப் படும் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS