இந்தியா
Typography

இந்தியாவின் ஒடிசாவை அண்மையில் தாக்கிய ஃபானி புயலின் போது மிகவும் சாமர்த்தியமாகச் செயற்பட்டு மனித உயிரிழப்புக்களைத் தவிர்த்த இந்தியா அரசின் வானிலை ஆய்வு மையத்துக்கு ஐ.நா சபையின் பேரிடர் குறைப்பு முகாமை பிரிவு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது.

மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய ஃபானி புயலின் கோர தாண்டவத்தால் ஆயிரக் கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் வேரோடு சாய்ந்தன.

மின் விநியோகம் பாதிக்கப் பட்டதுடன், போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப் பட்டது. மேலும் புயல் தொடர்பான சம்பவங்களில் சிக்கி 8 பேர் பலியானதுடன் 20 பேர் படுகாயம் அடைந்தனர். வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு இப்புயல் முழுமையாக ஒடிசா பகுதியில் கரையைக் கடந்தது. இதன் போது அதிகபட்சமாக மணிக்கு 245 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசியது.

இந்தியாவின் தமிழ்நாட்டை முன்பு கஜா புயல் தாக்கிய போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவீனமாக இருந்ததால் பெரும் உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் ஏற்பட்டிருந்தது. இந்த கஜா புயலை விட வலிமையானது ஃபானி புயல் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஃபானி புயல் வீரியத்துடன் தாக்கிய ஒடிசாவில் மீட்புப் பணிகள் தடை பட்டுள்ளன. பல இடங்களில் தகவல் தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. பூரிக்கு அருகே கடலோரப் பகுதியில் அதிகளவு மக்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் மீட்புப் பணிக்காக இந்திய தேசிய மீட்புப் படையினர் களத்தில் செயற்பட்டு வருகின்றனர். பாதிக்கப் பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துகள் மற்றும் உடைகள் என்பன வழங்கப் பட்டு வருகின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்