இந்தியா
Typography

செவ்வாய்க்கிழமை வலுவடைந்து அதிதீவிர புயலாக மாறிய ஃபானி புயல், சென்னையில் இருந்து 570 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதுடன் ஒடிசா கரை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை மாலை வரை தொடர்ந்து வலுப்பெற்று வடமேற்குத் திசையில் நகரும் இப்புயல் அதன் பின் வடக்கு மற்றும் வடகிழக்குத் திசையில் நகர்ந்து ஒடிசா கடற்கரை நோக்கிச் செல்லும் எனக் கணிப்பிடப் பட்டுள்ளது.

இதனால் குமரிக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் கிட்டத்தட்ட மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது. மீனவர்கள் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இப்போதைய நிலவரத்தின் படி தமிழகத்தில் கோடை மழை குறித்து முன் கூட்டியே சொல்ல முடியாத சூழல் உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஒடிசா மாநிலத்தின் பூரி நகரின் தென் பகுதியை ஃபானி புயல் மிக வலிமையாகத் தாக்கும் எனவும் இதனால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இப்புயல் வருகின்ற 3 ஆம் திகதி கோபால்பூர் மற்றும் சந்த்பாலி ஆகியவற்றின் கரையைக் கடக்கும் போது மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசும் என எச்சரிக்கப் பட்டுள்ளது. இப்புயல் காரணமாக சென்னையில் இன்று புதன் மற்றும் நாளையும் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் அதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்