இந்தியா
Typography

தமிழக மக்களால் பெரிதும் எதிர்ப்புக்கு உள்ளான சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு நிலம் கையகப் படுத்தியது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் மொத்த திட்டத்தையும் நீதிமன்றம் ரத்து செய்து தமிழக அரசு இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையும் செல்லாது என நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

மேலும் எந்தவித அனுமதியும் பெறாது 3 மாதத்தில் சேலம் முதல் சென்னை வரி கூகுள் மேப் மூலம் மட்டும் ஆய்வு செய்து சேலம் 8 வழிச் சாலைத் திட்டம் தொடர்பான அறிக்கை அளிக்கப் பட்டிருப்பது செல்லாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதாவது வன ஆய்வு, சுற்றுச் சூழல் ஆய்வு மற்றும் வீடுகள் தொடர்பான ஆய்வு என எந்தவொரு முக்கியமான ஆய்வும் செய்யப் படவில்லை என்பது தான் இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்த 8 வழிச் சாலைத் திடம் விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சென்று கொண்டிருந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவானது அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ரூ 10 000 கோடி செலவில் மேற்கொள்ளப் படவிருந்த இந்த 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1900 ஏக்கர் நிலங்களைக் கையகப் படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதில் ஏராளமான நிலங்கள் விவசாய நிலங்கள் என்பதால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் இத்திட்டத்துக்கு எதிராகக் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இத்திட்டத்தைத் தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி எம் பி அன்புமணி ராமதாஸ் உட்பட முக்கிய நபர்கள் வழக்குத் தொடர்ந்தனர். 8 மாதங்கள் நடைபெற்ற வழக்கு விசாரணையை அடுத்து பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திங்கட்கிழமை இத்தீர்ப்பு வெளியாகி 8 வழிச் சாலைத் திட்டம் தடை செய்யப் பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பானது எமது சட்ட ரீதியான போராட்டத்துக்கும் விவசாயிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என பாமக கட்சியின் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்