இந்தியா
Typography

பொள்ளாச்சி அருகே பெண்களுக்கு எதிரான இன்னொரு கொடூரம் அரங்கேறியுள்ளது.

திருமணம் நிச்சயிக்கப் பட்ட கோவையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவி பொள்ளாச்சி அருகே கழுத்தறுத்து கொலை செய்யப் பட்டுள்ளார். இந்த மாணவி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ராகவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பிரகதி என அடையாளம் காணப் பட்டுள்ளார்.

மேலும் இம்மாணவி கோவை ராமகிருஷ்ணா கலைக் கல்லூரியில் கணிதவியல் துறையில் Bsc படித்து வந்தவர் ஆவார். இவர் வார இறுதி விடுமுறையைக் கழிப்பதற்காக வெள்ளிக்கிழமை கல்லூரி விடுதியில் இருந்து வீட்டுக்குத் திரும்பியிருந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வீட்டை வந்தடையவில்லை. சந்தேகப் பட்ட பெற்றோர் அவரி செல்போனைத் தொடர்பு கொண்ட போதும் அது சுவிட்ச் ஆஃப் நிலையில் இருந்துள்ளது. கல்லூரி விடுதியைப் பெற்றோர் தொடர்பு கொண்ட போது அவர்களும் பிரகதி வீட்டுக்குக் கிளம்பி வெகு நேரமாகி விட்டது என்று தெரிவித்துள்ளனர். இதனால் கடும் பதற்றம் அடைந்த பெற்றோர் கோவை காட்டூர் போலிசில் புகார் அளித்துள்ளனர்.

இதை அடுத்து குறித்த மாணவியைப் போலிசார் வலை வீசித் தேடினர். இந்நிலையில் தான் பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் பூசாரிப்பட்டி என்ற பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெ ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டு கிடக்கும் தகவல் போலிசாருக்குக் கிடைத்தது. இதன் பின் உரிய இடத்துக்கு விரைந்து சென்ற போலிசார் விசாரணையைத் தீவிரப் படுத்தினர். இதன் போது கொல்லப் பட்டுக் கிடக்கும் பெண் பிரகதி தான் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.

மாணவி பிரகதிக்கு ஜுன் மாதம் திருமணம் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில் தான் அவர் கொலை செய்யப் பட்டுள்ளார். தற்போது பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் சதீஷ் என்ற இளைஞர் கைது செய்யப் பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்