இந்தியா
Typography

ஐக்கிய அரபு எமிரேட்டின் உயர்ந்த குடிமகனுக்கான சயித் என்ற பதக்க விருதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டுடன் நல்லுறவுகளை வளர்ப்பதில் பிரதமர் மோடியின் முயற்சிகளைப் பாராட்டியே அவருக்கு இவ்விருது வழங்கப் படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டின் இந்த உயரிய விருதான சயித் பதக்கம் அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்கள் தலைவர்களுக்கே வழங்கப் படுவது வாடிக்கையாகும். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சயித் பதக்கம் பிரதமர் மோடிக்கு வழங்கப் படுவதை ஐக்கிய அரபு எமிரேட்டின் ஜனாதிபதி ஷேக் கலீஃப் பின் சயத் அல் நஹியான் உறுதிப் படுத்தியுள்ளார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளால் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கும் இடையே இருந்த விரிவான உறவு மேலும் வலுப்படுத்தப் பட்டுள்ளதாகவும் மோடியின் இந்தப் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் அவருக்கு இவ்விருது அளிக்கப் படுவதாகவும் ஐக்கிய அரபு எமிரேட்டின் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்