இந்தியா
Typography

கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவில் போட்டியிட வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதனை ஏற்று கொண்டு ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், அக்கட்சி நிர்வாகிகள் உற்சாகம் அடைந்தனர். ராகுலின் வயநாடு போட்டி, அங்கு ஆளும் கட்சியாக உள்ள கம்யூனிஸ்ட்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வேட்புமனு தாக்கலுக்கு கேரளாவின் கோழிக்கோடு வந்த ராகுல், அங்கிருந்து ஹெலிகாப்டரில் வயநாடு சென்றார். வேட்டி சட்டையில் வந்த ராகுல், அங்கிருந்து, ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களுடன் இணைந்து பேரணியாக சென்று வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பிரியங்காவும் உடன் சென்றார். தென் மாநிலங்களில் ராகுல் போட்டியிடுவது இது முதல்முறை.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்