இந்தியா
Typography

தமிழ்ச் சினிமாவின் முன்னணி இயக்குனரான மகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 79. 

தமிழ்ச் சினிமாவின் பொக்கிசங்கள் என்று வர்ணிக்கப்படும் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மகேந்திரன். அண்மைய காலத்தில், தெறி உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் தன்னுடைய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன், சிகிச்சை பலனின்றி மறைந்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்