இந்தியா
Typography

உத்தரப் பிரதேசத்தில் சம்பால் என்ற நகரில் பாஜக நிர்வாகிகள் பங்கேற்ற ஹோலி பண்டிகை விழாவில் மேடை சரிந்து விழுந்ததில் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விழா பாஜக விவசாயிகள் அணி சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. காயம் அடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களில் விவசாய அணித் தலைவர் அகிலேஷ் யாதவும் அடங்குகின்றார்.

இந்த விபத்தில் யாருக்கும் மோசமான காயம் ஏற்படவில்லை. சிலருக்கு இலேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஹோலி பண்டிகையை ஒட்டி த்வஜ மேலா என்ற இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் ஒழுங்கு செய்யப் பட்டு வருகின்றது. ஆனால் இந்த முறை தான் மோசமான மேடை அமைப்பு மற்றும் அதிகளவு மக்கள் ஏறியதன் காரணமாக எதிர்பாராத விதமாக மேடை உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் வீடியோவிலும் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் பெரும்பாலும் விபத்தாகவே கருதப் படுகின்ற போதும் இவ்விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்