இந்தியா
Typography

ஏப்பிரல் 18 ஆம் திகதி தமிழகம் மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களிலுள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் பல முக்கிய கட்சிகளுக்குப் போட்டியாக முதன் முறை களம் இறங்கும் மக்கள் நீதி மய்யக் கட்சியுடன் இந்தியக் குடியரசுக் கட்சி அதிரடியாகக் கூட்டணி அமைத்துள்ளது.

முன்னதாக இந்த 40 தொகுதிகளிலும் தனியாகப் போட்டியிடுவதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சி அறிவித்திருந்ததுடன் அதற்கான வேட்பாளர் நேர்காணலையும் தற்போது நடத்திக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் தான் மக்கள் நீதி மய்யத்துடன் செ.கு.தமிழரசன் தலைமையில் இந்தியக் குடியரசுக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மேலும் நடைபெறவுள்ள தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியிலும், இடைத் தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் 3 இலும் இந்தியக் குடியரசுக் கட்சி போட்டியிட மக்கள் நீதி மய்யம் வாய்ப்பளித்துள்ளதாகவும் இத்தொகுதிகளில் தாம் பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் செ.கு.தமிழரசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் அதிமுக பாஜகவுடன் கூட்டு வைத்திருப்பதைத் தாம் ஏற்கவில்லை என்றும் தமிழரசன் கூறியுள்ளார். இதேவேளை மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அண்மையில் விலகியிருந்த குமரவேல் கட்சியில் சேர்ந்து சில நாட்களுக்குள் வேட்பாளர் நேர்காணலுக்கு கோவை சரளாவை அழைத்தது தனக்குப் பிடிக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் விதத்தில் தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு கோவை சரளா பேட்டியளிக்கும் போது, தனக்கு அரசியல் தெரியாது என்ற போதும் தன்னை முட்டாள் என விமர்சிக்கும் உரிமை குமாரவேலுக்குக் கிடையாது என்றும் குறித்த நேர்காணலில் அரசியல் சம்பந்தப் படாத பல பெரியவர்கள் இருந்த போதும் தான் மட்டும் கண்ணுக்குத் தெரிந்தது எவ்வாறு எனக் கேள்வி எழுப்பியுளார்.

மேலும் ஒரு இந்திய நாட்டின் குடியுரிமை பெற்றவர் என்ற விதத்தில் எனக்கும் மரியாதை கொடுத்து நேர்காணலுக்கு கமலஹாசன் அழைத்துள்ளார் என்றும் கோவை சரளா மேலும் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்