இந்தியா
Typography

கணைய புற்று நோய் காரணமாக மும்பையிலும் டெல்லியிலும் சிகிச்சை பெற்று வந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் சிகிச்சைப் பலனின்றி தனது 63 ஆவது வயதில் காலமாகி உள்ளார்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு தான் மேலதிக சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பியிருந்தார். அதன் பின் சில வாரங்கள் ஓய்வெடுத்து விட்டு அரச பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

மனோகர் பாரிக்கர் சுகயீனம் காரணமாக அவருக்குப் பதிலாகத் தாம் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆளுனரை வலியுறுத்திய போதும் பாஜக இதற்குத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பொது வாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின் சேவையை நாட்டு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என அவரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மனோகரின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளார்.

இதுதவிர காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசனும் மேலும் பல முக்கிய தலைவர்களும் கூட மனோகரின் மறைவுக்குத் தமது இரங்கல்களைப் பதிவு செய்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்