இந்தியா
Typography

மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தின் மேலே 1984 ஆமாண்டு அமைக்கப் பட்ட நடை மேம்பாலம் கடந்த வருடம் பெய்த மழையில் மேலும் பழுதாகி இருந்த நிலையில் வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் 6 பேர் பலியானதுடன் 30 பேர் காயம் அடைந்தும் உள்ளனர். 2008 ஆமாண்டு மும்பையில் அஜ்மல் கசாப் உட்பட பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது இந்த நடை மேம்பாலம் அவர்களால் பயன்படுத்தப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனால் இத்தாக்குதலை அடுத்து இந்த மேம்பாலத்தை கசாப் பாலம் என்றே பொது மக்கள் அழைத்து வந்தனர். இந்தப் பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்துக் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மும்பை முதல்வர் தேவேந்திர ஃபத்நாவிஸ் தனது டுவிட்டரில் ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை பாஜக எம்பியான எம் எல் ஏ ராஜ் புரோஹித் ஊடகத்துக்குப் பேட்டியளிக்கையில் இந்த விபத்து தவிர்த்திருக்கப் பட வேண்டிய ஒன்று என்றும் இந்தப் பாலத்துக்கு ஒப்புதல் அளித்த எஞ்சினியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS