இந்தியா
Typography

அண்மையில் பொள்ளாச்சியில் இளைஞர் கும்பல் ஒன்று நூற்றுக் கணக்கான பெண்களை ஃபேஸ்புக் மூலம் மயக்கி அழைத்துச் சென்று இரகசியமாகப் பாலியல் பலாத்காரப் படுத்தி அதனை வீடியோ எடுத்துப் பணம் பறித்து மிக மோசமான குற்றச் செயலில் ஈடுபட்டமை பெண் ஒருவரின் துணிச்சலான காவல்துறை புகாரின் அடிப்படையில் பிடிபட்டது.

இச்சம்பவத்தால் தமிழகமே கொதித்து எழுந்துள்ள நிலையில் இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அல்லது துணை முதல்வர் இதுவரை வாய் திறக்காதது ஏன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட கும்பலுக்கு மிகக் கடுமையான தண்டனை அளிக்கப் பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின் இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் திமுகவைச் சேர்ந்த கனிமொழி தலைமையில் பொள்ளாச்சி சம்பவத்தை எதிர்த்து போலிஸ் தடையை மீறிப் போராட்டம் நடைபெற்றது. இதில் கனிமொழி பேசிய போது இதன் பின்னணியிலுள்ள அனைவரும் கைது செய்யப் பட வேண்டும் என்றார். மேலும் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் இந்த கொடுமையை எதிர்த்துப் பொள்ளாச்சியில் பேரணி நடத்தப் பட்டுள்ளது. இதில் நடிகை ஸ்ரீ பிரியா, கவிஞர் சினேகன் உட்பட 300 இற்கும் அதிகமானவர்கள் பங்கு பெற்றதுடன் இக்கொடுமையில் பாதிக்கப் பட்டவர்களது அடையாளம் வெளியிடப் படக் கூடாது என மனுவும் அளித்தனர்.

இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி அடுத்து சிபிஐக்கு மாற்றப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்